< Back
கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்
கர்நாடகா சட்டசபை தேர்தல்: 42 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

6 April 2023 11:39 AM IST
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் 2ம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது!
பெங்களூரு
கர்நாடகாவில் மே 10-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்று, மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.
தற்போது 2ம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது!காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலில் 124 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது 42 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது,
மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!