"அரசியலுக்கு வராதீர்கள்" கிச்சா சுதீப்புக்கு ரசிகர்கள் வேண்டுகோள்...!
|கிச்சா சுதீப், இன்று பா.ஜ.க. கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
பெங்களூரு
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.
கிச்சா சுதீப், இன்று பா.ஜ.க. கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பாக இவர் பிரசாரம் செய்யவுள்ளார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கதுறை என யாரும் என்னை மிரட்டவில்லை என்றும் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கிசா சுதீப் ரசிகர்கள் "உங்களிடம் இருந்து நல்ல படங்களை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்"
என #WeDontWantKicchaInPolitics என்ற ஹேஷ்டாகை இந்தியளவில் டிரெண்ட் செய்து கிச்சா சுதீப் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.