< Back
மாநில செய்திகள்
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
23 Nov 2024 6:43 PM IST

ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹேமந்த் சோரனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் வெற்றி மக்களாட்சிக்கும் மதசார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்