< Back
ஆரோக்யம்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
ஆரோக்யம்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

தினத்தந்தி
|
28 Dec 2024 6:00 AM IST

பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் தீட்டப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன்ரைஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரை, ப்ரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் போன்ற காய்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு அடியில் விளையும் கிழங்குகளை குறைத்துக் கொள்ளவேண்டும்.

புரதம் அதிகமாக உள்ள பால், முட்டையின் வெள்ளை, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டக்ஸ்) குறைவாக உள்ள பழங்களை உண்ணலாம்.

பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் தீட்டப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் கைக்குத்தல் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு குறைவு.

சர்க்கரை நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளைவிட உணவு பழக்கங்களில் மூலம் எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால், நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவு பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது. டைப் 2 நீரிழிவு நோய்க்கு வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் இது டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம்.

மேலும் செய்திகள்