ஆரோக்யம்
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும்  மன அழுத்தம்
ஆரோக்யம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் மன அழுத்தம்

தினத்தந்தி
|
1 Sept 2024 10:53 AM IST

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சர்க்கரை நோயாளிகளை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதை பார்ப்போம்.

மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ ஏற்படும் உடல் அல்லது மனரீதியான தாக்கங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையாகும். இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் (Stress) என்று அழைக்கின்றனர். இது கடுமையான மன அழுத்தம், எபிசோடிக் மன அழுத்தம், நாள்பட்ட மன அழுத்தம் என்று மூன்று வகைப்படும். மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். மன அழுத்தம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணங்களாக கீழ்கண்டவை கருதப்படுகின்றன:

1) அதிகப்படியான வேலை அல்லது வேலை சம்பந்தபட்ட பிரச்சினைகள்

2) திடீர் எதிர்பாராத நிகழ்வுகள்

3) சர்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற உடல்ரீதியான பிரச்சினைகள், நாள்பட்ட நோய்களின் பாதிப்பு.

4) கடன், நிதி உறுதியற்ற நிலை, நிதிச்சுமை அல்லது நிதிப்பற்றாக்குறை.

5) கடந்தகால அல்லது நிகழ்கால அதிர்ச்சிகரமான விபத்துக்கள் அல்லது நிகழ்வுகள்.

6) குடும்ப பிரச்சினைகள் மற்றும் ஆதரவு இல்லாமை.

7) ஆபத்தான வேலை சூழ்நிலைகள்.

8) நீண்ட வேலை நேரம்

9) திருமணம் சார்ந்த பிரச்சினைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு மன அழுத்தம் ரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு தினமும் 9 முதல் 11 மில்லி கிராம் அளவு கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் போது கார்டிசோல் ஹார்மோன் சுரக்கப்படுவது 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது. மேலும், மன அழுத்தத்தினல் அட்ரினலின், நார்அட்ரினலின் போன்ற ஹார்மோன்களும் அதிக அளவு சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் அனைத்தும், இன்சுலின் எதிர்மறை நிலையை அதிகரித்து, இன்சுலின் செயல் திறனை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம், யோகா அல்லது தியானம் போன்ற மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், மருத்துவரின் உளவியல் ஆலோசனைகள், ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றினால் மன அழுத்ததினால் ரத்த சர்க்கரை அதிகமாவதை குறைக்கலாம்.

மேலும் செய்திகள்