< Back
ஆரோக்யம்
நீரிழிவு அபாயத்தை தவிர்க்க சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிடுங்கள்
ஆரோக்யம்

நீரிழிவு அபாயத்தை தவிர்க்க சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிடுங்கள்..!

தினத்தந்தி
|
23 Nov 2024 6:00 AM IST

சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சி என்பது பாலூட்டிகளில் இருந்து பெறப்பட்ட இறைச்சியாகும்.

இதில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை அடங்கும். இதை பார்க்கும்போது சிவப்பு நிறமாக இருப்பதால் இதை சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றனர்.

சிக்கன் மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது. சிக்கன் இறைச்சியில் புரதம் அதிகமாக இருப்பதாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) குறைவாக இருப்பதாலும் நாம் இதை சாப்பிடலாம். பொறித்த வடிவிலோ வறுத்த வடிவிலோ சாப்பிடக்கூடாது.

மீன் இறைச்சியிலும் அதிகமாக புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (omega 3 fatty acids ) போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மையான பொருட்கள் உள்ளன. மேலும் வைட்டமின் D,வைட்டமின் B6, B12 போன்றவையும் இருக்கிறது. 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு (Type 2 diabetes) டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆகையால் சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும்.

மேலும் செய்திகள்