ஆரோக்யம்
ஆரோக்கியத்தை பேண எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

Photo Credit: ANI

ஆரோக்யம்

ஆரோக்கியத்தை பேண எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

தினத்தந்தி
|
26 July 2024 12:48 PM IST

மனிதன் ஆரோக்கியமாக வாழ நல்ல தூக்கம் இன்றியமையாதது. வயதுக்கேற்றபடி ஒவ்வொரு நபரும் எவ்வளவு தூங்க வேண்டும் என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஒரு நாளை உற்சாகமாக துவங்கவும், அந்த நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் முன்தினம் இரவு நன்றாக தூங்கி இருக்க வேண்டும். ஒருவர் தனது வயதுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவு தினசரி தூங்குவது அவசியம். தூக்கம் சரியாக இல்லாமல் இருந்தால் பல நோய்களுக்கும் அதுவே கதவை திறந்து விட்டுவிடும்.

முடிந்தவரை இடையூறு இல்லாத தூக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதும் சிறந்த தரமான தூக்கம் என்பதில் அடங்கும். வயதுக்கேற்றபடி எவ்வளவு நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பது குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

  • 0-3 மாதம் : 14 முதல் 17 மணி நேரம்
  • 4-12 மாதம்: 12 முதல் 16 மணி நேரம்
  • 1- 2 வயது: 11 முதல் 14 மணி நேரம்
  • 3-5 வயது: 10 முதல் 13 மணி நேரம்
  • 6-12 வயது: 9 முதல் 12 மணி நேரம்
  • 13-17 வயது: 8 முதல் 10 மணி நேரம்
  • 18-60-வயது: 7 மணி நேரம் அல்லது அதற்கு மேல்
  • 61-64 வயது: 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம்
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 7-8 மணி நேரம்


Java burn

Nagano tonic

மேலும் செய்திகள்