ஆரோக்யம்
கால் பாதங்களில் வரும் பித்த வெடிப்பு
ஆரோக்யம்

கால் பாதங்களில் வரும் பித்த வெடிப்பு.. எளிதில் குணப்படுத்தலாம்

தினத்தந்தி
|
24 Sept 2024 7:09 PM IST

பாத வெடிப்பை எளிதில் சரிசெய்வதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்ப்போம்.

தோலின் உள் அடுக்கில் உள்ள எண்ணெய் பதம் குறைவது, உடலின் நீர்ச்சத்து குறைவது, உடல் சூடு இவைகளால் தோல் வறட்சி அடைந்து பாத வெடிப்பு அல்லது பித்த வெடிப்பு ஏற்படுகிறது. பனிக்காலத்தில் இந்நோய் அதிகப்படும். பாத வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலை, இரவு இருவேளை வெதுவெதுப்பான வெந்நீரில் கால் பாதங்களை நன்றாக மூழ்கவைத்து கழுவ வேண்டும்.

பாத வெடிப்பை சரிசெய்ய ஆலோசனைகள்:

1. சோற்றுக்கற்றாழையின் ஜெல்லியை நன்றாக அரைத்து, ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையுடன் நன்றாக கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும்.

2. மருதோன்றி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து பூசலாம்.

3. பறங்கி பட்டை சூரணம் -1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மிகி, பவள பற்பம் -200 மிகி ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

4. பாத வெடிப்பு உள்ள இடங்களில் கிளிஞ்சல் மெழுகு அல்லது அமிர்த வெண்ணெய் போட வேண்டும்.

5. உணவில் மோர், தயிர், நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும், வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்