இளம் வயதினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்.. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெறுங்கள்
|இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. நாளுக்கு நாள் இயம் வயது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்கள், நீரிழிவு நோயால் பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்கள்:
1. உடல் எடை அதிகமாக இருத்தல் குறிப்பாக வயிற்றின் சுற்றளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருத்தல்.
2. உடல் பருமனால் இன்சுலின் எதிர்மறை நிலை.
3. பெற்றோர் அல்லது நெருங்கிய சொந்தகுடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் நீரிழிவுநோய் பாதித்திருத்தல்.
முக்கிய அறிகுறிகள்:-
1. பாலியூரியா- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
2. பாலிடிப்ஸியா- அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்.
3. பாலிபேஜியா- அடிக்கடி பசி எடுத்தல்.
4. உடல் சோர்வு
5. மங்கலான பார்வை
6. காரணம் இல்லாமல் திடீர் எடை இழப்பு
7. கழுத்து மற்றும் இடுப்பில் தோல் கருமை நிறமாக மாறுதல்
8. அடிக்கடி தொற்று ஏற்படுதல்.
9. பாதங்களில் எரிச்சல், மதமதப்பு அல்லது உணர்ச்சியின்மை