< Back
ஆரோக்யம்
சர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்துகளுடன் மூலிகை மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாமா?
ஆரோக்யம்

சர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்துகளுடன் மூலிகை மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாமா?

தினத்தந்தி
|
14 Dec 2024 6:00 AM IST

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிய எச்.பி.ஏ1சி பரிசோதனை துல்லியமானதாகும்.

நீரழிவு நோயாளிகளில் சிலர் அலோபதி மருந்துகளுடன் மூலிகை மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். மூலிகை மருந்துகளை சாப்பிடும் போது அலோபதி மருந்துகளின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். மேலும் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது எதிர்பாரா பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

(எ.கா) வேட்டை பாக்கு மூலிகையை ( செயின்ட் ஜான் வொர்ட்) சாப்பிடும்போது நீரிழிவு மாத்திரையான மெட்பார்மின் அளவை ரத்தத்தில் அதிகரிக்க செய்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் நீரிழிவு நோய்க்கு அலோபதி மருந்துகளுடன் மூலிகை மருந்துகளை சேர்த்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

உணவு கட்டுப்பாடு

நீரழிவு நோயாளிகளில் சிலருக்கு சர்க்கரை அளவு உணவுக்குப் பின்னும் முன்பும் சரியாக இருக்கையில் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா? என்ற சந்தேகம் எழும். உணவுக் கட்டுப்பாடோடு இருந்தால் போதும் என்றும் நினைக்கத் தோன்றும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாத்திரை சாப்பிடாமலேயே உணவு கட்டுப்பாடு மூலமாகவே கட்டுக்குள் இருந்தால் மருந்துகளின் டோஸை குறைத்துக்கொள்ளலாம்.

ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிய உணவுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்படும் ரத்த சர்க்கரையின் அளவைவிட (ஃபாஸ்டிங் மற்றும் போஸ்ட்ப்ராண்டியல்) மூன்று மாத ரத்த சர்க்கரையின் அளவின் சராசரியான எச்.பி.எ1சி பரிசோதனையே துல்லியமானதாகும். மாத்திரைகளை மருத்துவர் அனுமதியின்றி நிறுத்தக் கூடாது.

மேலும் செய்திகள்