ஆரோக்யம்
உணவு பழக்கத்தால் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா?
ஆரோக்யம்

உணவு பழக்கத்தால் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா?

தினத்தந்தி
|
21 Dec 2024 6:00 AM IST

டைப் 1 நீரிழிவு நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருத்துவ சிகிச்சையைவிட உணவு பழக்கங்களின் மூலம் எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என பொதுவாக பேசப்படுகிறது. ஆனால், நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவு பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது.

பொதுவாக நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகை இருக்கிறது.

டைப் 1 நீரிழிவு நோயானது இன்சுலின் சார்ந்த நிலையாகும். இந்நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் டைப் 1 நீரிழிவு நோய்க்கு உணவு பழக்கங்களின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது.

டைப் 2 நீரிழிவு நோய்க்கு வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் இது டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம். மேலும் பல ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு நீடித்தால், கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும். இந்நிலையில் உணவு பழக்க வழக்கங்களால் கட்டுப்படுத்துவது சிரமமாகும். மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். மாத்திரைகளின் தேவைகளை தீர்மானிப்பது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களின் எண்ணிக்கை, அதன் செயல்பாடு மற்றும் திசுக்களில் உள்ள இன்சுலின் எதிர்மறை நிலையின் அளவாகும்.

மேலும் செய்திகள்