< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போட்டியை நடத்தும் கத்தார் வெளியேற்றப்பட்டது...!
உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போட்டியை நடத்தும் கத்தார் வெளியேற்றப்பட்டது...!

தினத்தந்தி
|
26 Nov 2022 12:16 AM IST

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

தோஹா,

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் போட்டியில் நடத்து கத்தார் அணியும் விளையாடி வருகிறது.

போட்டி தொடங்கிய முதல் நாளான கடந்த ஞாயிற்று கிழமை கத்தார் அணி ஈக்குவடாரை எதிர்கொண்டது. இப்போட்டியில், ஈக்குவடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இதனை தொடர்ந்து, தனது 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை கத்தார் இன்று எதிர்கொண்டது. இப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியடைந்தது.

அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. லீக் ஆட்டத்தில் வரும் செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது. ஏற்கனவே 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் கத்தார் அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

போட்டியை நடத்தும் கத்தார் அணி அடுத்த சுற்றுக்கு செல்லாமலேயே லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வு கத்தார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்