உலகக்கோப்பை கால்பந்து: அன்று மரடோனா.... இன்று மெஸ்சி..!!
|1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் கோப்பையை வென்றுள்ளார்.
தோகா,
* 2002-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து கோப்பையை வென்று வந்த ஐரோப்பிய நாடுகளின் வீறுநடைக்கு அர்ஜென்டினா முடிவு கட்டியது.
* உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் (26 ஆட்டம்) என்ற சாதனையை மெஸ்சி படைத்தார்.
* 2010-ம் ஆண்டு ஸ்பெயின் அணி தொடக்க லீக்கில் தோற்று அதன் பிறகு மகுடத்துக்கு முத்தமிட்டது. இதே போல் இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா முதல் லீக்கில் சவுதிஅரேபியாவிடம் தோற்று விட்டு இப்போது சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
* 1962-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை அடுத்தடுத்து எந்த அணியும் வென்றதில்லை. அந்த பெருமையை பெறும் பிரான்சின் முயற்சி மயிரிழையில் நழுவிப்போனது.
* உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவு பெனால்டி ஷூட்-அவுட் மூலம் தீர்மானிக்கப்படுவது இது 3-வது முறையாகும்.
* 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.