< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த போலந்து வீரர் லெவன்டோஸ்கி
உலக கோப்பை கால்பந்து - 2022

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த போலந்து வீரர் லெவன்டோஸ்கி

தினத்தந்தி
|
27 Nov 2022 2:00 AM IST

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை போலந்து வீரர் லெவன்டோஸ்கி சமன் செய்தார்.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போலந்து அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் போலந்து அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு தாவியது.

சவுதி அரேபியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் போலந்து கேப்டன் ராபர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோல் அடித்தார். 34 வயதான லெவன்டோஸ்கி சர்வதேச போட்டியில் போலந்து அணிக்காக அடித்த 77-வது கோல் (136 ஆட்டங்கள்) இதுவாகும்.

இதன் மூலம் லெவன்டோஸ்கி சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் பிரேசில் ஜாம்பவான் பீலேவின் (92 ஆட்டங்களில் 77 கோல்கள்) சாதனையை சமன் செய்தார்.

மேலும் செய்திகள்