< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலக கோப்பை கால்பந்து - 2022
பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கணுக்கால் பகுதியில் காயம்
|25 Nov 2022 1:46 PM IST
செர்பியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
தோகா,
உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் செர்பியா- பிரேசில் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளில் நெய்மர் ஆடுவார் என பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் கூறி உள்ளார். இதனிடையே, நெய்மரின் காயத்தின் நிலை குறித்து 48 மணி நேரத்திற்குப் பிறகே தெரியவரும் என பிரேசில் அணியின் மருத்துவர் கூறி உள்ளார்.