< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி
உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி

தினத்தந்தி
|
30 Nov 2022 3:42 AM IST

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றிபெற்றது.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் ஆட்டத்தின் முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

இந்நிலையில் ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் போட்டியை சமன் செய்ய ஈரான் வீரர்களின் எடுத்த முயற்சிகள் வீணானது. இதனையடுத்து ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதன்படி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்