< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலக கோப்பை கால்பந்து - 2022
கணுக்காலில் காயம்: அடுத்த 2 போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் - பிரேசில் அணி நிர்வாகம்
|25 Nov 2022 11:27 PM IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் வீரர் நெய்மரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
தோஹா,
தோகா, உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று செர்பியா- பிரேசில் அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றிபெற்றது.
போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அடுத்த 2 போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் என்று பிரேசில் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. நெய்மர் இல்லாதது பிரேசில் அணிக்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.