< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலக கோப்பை கால்பந்து - 2022
பிபா கால்பந்து போட்டி; தோல்வியை கொண்டாடிய ஈரானிய நபரை சுட்டு கொன்ற பாதுகாப்பு படை
|1 Dec 2022 11:04 PM IST
பிபா கால்பந்து போட்டியில் ஈரானின் தோல்வியை கொண்டாடிய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
தெஹ்ரான்,
கத்தாரில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய ஈரான் அணியை அமெரிக்கா தோற்கடித்தது. இதனை தொடர்ந்து, போட்டியில் இருந்து ஈரான் வெளியேறியது.
1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் பகைமை நாடுகளாக உள்ளன. ஈரானின் தோல்வியை சொந்த நாட்டை சேர்ந்த மெஹ்ரான் சமக் (வயது 27) என்பவர் கொண்டாடியுள்ளார் என கூறப்படுகிறது.
சமக் தனது காரில் ஒலிப்பானை உரக்க ஒலிக்க செய்து சென்றுள்ளார். இதனை கவனித்த ஈரான் பாதுகாப்பு படையினர், சமக்கின் தலையில் நேரிடையாக துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்றனர். இதனை ஓஸ்லோவை அடிப்படையாக கொண்ட ஈரான் மனித உரிமை அமைப்பு தெரிவித்து உள்ளது.