அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவரை கடுமையாக விமர்சித்த குரோஷியா கேப்டன்
|அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவரை குரோஷியா கேப்டன் லுகா மாட்ரிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தோகா,
கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில், குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.
இந்த அபாரமான வெற்றிக்கு அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அடித்த பெனால்டி ஷூட் அவுட் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவர் டேனியல் ஒர்சாட்டோவை குரோஷியா கேப்டன் லுகா மாட்ரிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தான் இதற்கு முன் விளையாடிய ஏராளமான போட்டிகளுக்கு டேனியல் ஒர்சாட்டோ நடுவராக இருந்துள்ளார் எனவும், அவை அனைத்தும் தனக்கு மோசமான நினைவுகளையே தந்ததாகவும் லுகா மாட்ரிக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் நடுவர் ஒர்சாட்டோ அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்தது ஒரு பேரிடர் எனவும் விமர்சித்துள்ளார்.