தமிழக அரசில் வேலை வாய்ப்பு: 861 காலி பணி இடங்கள்
|தமிழக அரசில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள 861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரம் வருமாறு:
பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி)
காலி பணி இடங்கள்: 861 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு)
பதவி: உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி: ஐ டி ஐ, டிப்ளமோ உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள்
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். சில பதவி களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024
தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 9-11-2024
மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை
இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.asp