< Back
கல்வி/வேலைவாய்ப்பு
தமிழக அரசில் வேலை வாய்ப்பு:  861 காலி பணி இடங்கள்
கல்வி/வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை வாய்ப்பு: 861 காலி பணி இடங்கள்

தினத்தந்தி
|
21 Aug 2024 4:30 AM IST

தமிழக அரசில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள 861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரம் வருமாறு:

பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி)

காலி பணி இடங்கள்: 861 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு)

பதவி: உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு பதவிகள்

கல்வி தகுதி: ஐ டி ஐ, டிப்ளமோ உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள்

வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். சில பதவி களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024

தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 9-11-2024

மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை

இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.asp

மேலும் செய்திகள்