< Back
கல்வி/வேலைவாய்ப்பு
பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு-அண்ணா பல்கலைக்கழகம்
கல்வி/வேலைவாய்ப்பு

பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு-அண்ணா பல்கலைக்கழகம்

தினத்தந்தி
|
25 Aug 2024 7:30 AM GMT

அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்கிறது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்