< Back
கல்வி/வேலைவாய்ப்பு
ரெயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்; எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்? - வெளியான அறிவிப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

ரெயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்; எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்? - வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
27 July 2024 4:39 PM IST

ரெயில்வே துறையில் 7 ஆயிரத்து 951 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

இந்திய ரெயில்வேயில் பல்வேறு துறைகள் உள்ளன. இந்த துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகளை ரயில்வே தேர்வு ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ரெயில்வேயில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ரெயில்வேயில் ஜூனியர் என்ஜினீயர், டிபோர்ட் மெட்டிரியல் சூப்பரண்டெண்ட் அண்ட் கெமிக்கல் அண்ட் மெட்டலுர்ஜிகல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 7 ஆயிரத்து 934 காலி இடங்களை நிரப்பவும், கெமிக்கல் சூப்பர்வைசர் (கோரக்பூர் மட்டும்) பணிகளுக்கு 17 காலி இடங்களை நிரப்பவும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

18 முதல் 36 வயதிற்கு உள்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரெயில்வேயில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 951 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

தேர்வில் பங்கேற்க தகுதியான நபர்கள் 30.7.2024 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.8.2024 ஆகும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 29.8.2024. விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள 30.8.2024 முதல் 8.9.2024 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரெயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு... https://rrbald.gov.in/


மேலும் செய்திகள்