ரெயில்வேயில் வேலை - 11,558 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
|ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரயில்வேயில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 11,558
பணி விவரம்: டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலேளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸ்சிஸ்டண்ட், சீனியர் கிளர்க், கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் , ஜூனியர் கிளர்க், டிரெயின் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். 12-ம் வகுப்பு, டிகிரி வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 18 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பானது 33 ஆகும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு/சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி நாள்; 13.10.2024
விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.rrbchennai.gov.in/