10-ம் வகுப்பு முடித்தவர்களும் சாதிக்கலாம்... கொட்டிக்கிடக்கும் பாலிடெக்னிக் படிப்புகள்
|பிளஸ் 2 படித்தவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பொறியியல் கல்லூரிகள் பட்டப்படிப்பை வழங்குவதைப்போலவே, பொறியியல் துறையில் “டிப்ளமோ” எனப்படும் பட்டயப்படிப்பை பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்துகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள்
பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இது மூன்று வருட படிப்பு ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு எளிதில் பாலிடெக்னிக் படிப்புகளில் இடம் கிடைக்கிறது.
பொதுப்போட்டி (Open Competition), பிற்படுத்தப்பட்ட பிரிவு (Backward Class-Others), பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (Backward Class-Muslim), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (Most Backward Class/DNC), பட்டியலினத்தவர்கள் (Scheduled Caste), பட்டியலினத்தவர்கள் அருந்ததியர் (Scheduled Caste-Arunthatiyars), பழங்குடியினர் (Scheduled Tribe) ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பாலிடெக்னிக் படிப்புகளில் சேர அதிகபட்ச வயது வரம்பு (Age Limit) கிடையாது.
பிளஸ் 2 படித்தவர்கள்
பிளஸ் 2 படித்த மாணவர்களும் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்தால் போதும். இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இவர்களுக்கு "டிப்ளமோ" வழங்கப்படும்.
பாலிடெக்னிக்குகளில் சேர விரும்பும் மாணவர்கள் அந்த பாலிடெக்னிக்குகளுக்கு நேரடியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பாலிடெக்னிக்குகளும், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகளும் உள்ளன.
பாலிடெக்னிக்குகளில் படித்த மாணவர்கள் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளது. இதனை "லேட்டரல் என்ட்ரி" (Lateral Entry) என அழைப்பார்கள். பாலிடெக்னிக்குகளில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காகப் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் 10 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் டிப்ளமோ படிப்புகள் ஏறத்தாழ எல்லா பாலிடெக்னிக்குகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் சில புதிய டிப்ளமோ படிப்புகள் குறிப்பிட்ட சில சுயநிதிப் பாலிடெக்னிக்குகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
டிப்ளமோ படிப்புகள் - பாடப்பிரிவுகள்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்படும் சில முக்கிய டிப்ளமோ படிப்புகள் விவரம் பின்வருமாறு:
1. டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் (Diploma in Civil Engineering)
2.டிப்ளமோ இன் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Diploma in Electrical Engineering)
3.டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Diploma in Electronics Engineering)
4.டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Diploma in Mechanical Engineering)
5.டிப்ளமோ இன் புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Diploma in Production Engineering)
6.டிப்ளமோ இன் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் (Diploma in Agricultural Engineering)
7. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Diploma in Computer Science and Engineering)
8. டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Diploma in Electronics and Tele Communication Engineering)
9. டிப்ளமோ இன் சிவில் அன்ட் ரூரல் இன்ஜினியரிங் (Diploma in Civil and Rural Engineering)
10.டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Diploma in Automobile Engineering)
11. டிப்ளமோ இன் காஸ்மட்டாலஜி (Diploma in Cosmetology)
12. டிப்ளமோ இன் பவுண்டரி டெக்னாலஜி (Diploma in Foundry Technology)
13. டிப்ளமோ இன் புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Diploma in Production Engineering)
14. டிப்ளமோ இன் சேல்ஸ்மேன்ஷிப் (Diploma in Salesmanship)
15. டிப்ளமோ இன் லெதர் டெக்னாலஜி (Diploma in Leather Technology)
16. டிப்ளமோ இன் கெமிக்கல் டெக்னாலஜி (Diploma in Chemical Technology)
17. டிப்ளமோ இன் மெட்டலர்ஜி (Diploma in Metallurgy)
18. டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி (Diploma in Polymer Technology)
19. டிப்ளமோ இன் பல்ப் பேப்பர் டெக்னாலஜி (Diploma in Pulp Paper Technology)
20.டிப்ளமோ இன் ரெப்ரிஜிரேஷன் அன்ட் ஏர் கண்டிஷனிங் (Diploma in Refrigeration and Air Conditioning)
21. டிப்ளமோ இன் செராமிக் டெக்னாலஜி (Diploma in Ceramic Technology)
22. டிப்ளமோ இன் பிஷ்ஷரிஸ் டெக்னாலஜி (Diploma in Fisheries Technology)
23. டிப்ளமோ இன் ஹேண்ட்லூம் டெக்னாலஜி (Diploma in Handloom Technology)
24. டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி (Diploma in Printing Technology)
25. டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (Diploma in Plastic Technology)
26. டிப்ளமோ இன் சுகர் டெக்னாலஜி (Diploma in Sugar Technology)
27. டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Diploma in Textile Technology)
28. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி (Diploma in Computer Technology)
29. டிப்ளமோ இன் டிசைன் அன்ட் டிராப்டிங் (Diploma in Design and Drafting)
30. டிப்ளமோ இன் கார்மெண்ட் டெக்னாலஜி (Diploma in Garment Technology)
31. டிப்ளமோ இன் காஸ்டியூம் டிசைன் அன்ட் டிரஸ் மேக்கிங் (Diploma in Costume Design and Dress Making)
32. டிப்ளமோ இன் மேன்மேடு பைபர் டெக்னாலஜி (Diploma in Man Made Fibre Technology)
33. டிப்ளமோ இன் மரைன் இன்ஜினியரிங் (Diploma in Marine Engineering)
34. டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டிசைன் அன்ட் வீவிங் (Diploma in Textile Design and Weaving)
35. டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் மார்க்கெட்டிங் அன்ட் மேனேஜ்மெண்ட் (Diploma in Textile Marketing and Management)
26. டிப்ளமோ இன் டூல் இன்ஜினியரிங் (Diploma in Tool Engineering)
27.டிப்ளமோ இன் புரோத்தோடிக்ஸ் அன்ட் ஆர்தோடிக்ஸ் (Diploma in Prothotics and Orthotics)
27.டிப்ளமோ இன் மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் (Diploma in Modern Office Practice)
28.டிப்ளமோ இன் இசிஜி டெக்னாலஜிஸ் (ECG Technologies)
29.டிப்ளமோ இன் வெப் டிசைனிங் (Diploma in Web Designing)
30.டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் (Diploma in Logistics)
31.டிப்ளமோ இன் பயோ மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் (Diploma in Bio Medical Electronics)
32.டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Diploma in Information Technology)
33.டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Diploma in Mechatronics Engineering)
34.டிப்ளமோ இன் டூல் அன்ட் டை இன்ஜினியரிங் (Diploma in Tool and Die Engineering)
35.டிப்ளமோ இன் என்விரோன்மென்டல் இன்ஜினியரிங் (Diploma in Environmental Engineering)
- போன்ற பல படிப்புகள் உள்ளன.
தொழில்நுட்ப படிப்புகள்- பாடப்பிரிவுகள்
1. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering)
"டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்" என்னும் படிப்பு மூன்று வருடப் படிப்பு ஆகும். இதில் எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
2. காஸ்மட்டாலஜி (Cosmetology)
அழகுக் கலை சம்பந்தப்பட்ட படிப்பாக "டிப்ளமோ இன் காஸ்மட்டாஜி" என்னும் படிப்பு உள்ளது. இது ஓராண்டு படிப்பு ஆகும். பெண்கள் மட்டும் சேர்ந்து படிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களே இதில் சேரலாம்.
3. பவுண்டரி டெக்னாலஜி (Foundry Technology)
"டிப்ளமோ இன் பவுண்டரி டெக்னாலஜி" (Diploma in Foundry Technology) என்னும் படிப்பு மூன்றரை வருடப் படிப்பு ஆகும். இதில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
4. எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Tele Comunication Engineering)
எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் என்ற படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இது 3 வருடப் படிப்பு ஆகும்.
5. புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Production Engineering)
எஸ்.எஸ்.எல்.சி.யில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட படிப்பு "டிப்ளமோ இன் புரொடக்ஷன் இன்ஜினியரிங்" ஆகும். இது மூன்று வருடப் படிப்பு ஆகும்.
6. சேல்ஸ்மேன்ஷிப் (Salesmanship)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படிப்பு "சர்டிபிகேட் கோர்ஸ் இன் சேல்ஸ்மேன்ஷிப்" ஆகும்.
7. அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் (Agricultural Engineering)
எஸ்.எஸ்.எல்.சி.யில் வெற்றிபெற்ற மாணவர்கள் சேர்ந்து பயன் பெறுகின்ற வகையில் அமைக்கப்பட்ட படிப்புதான் "டிப்ளமோ இன் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங்" ஆகும். இது மூன்று வருடப் படிப்பு ஆகும்.
8. கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering)
இப்போது பிரபலமாகப் பேசப்படும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளைத் தரும் படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகும். இந்தப் படிப்புகள் இப்போது பல பாலிடெக்னிக்குகளிலும் சொல்லித் தரப்படுகின்றன. "டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்" (Diploma in Computer Science and Engineering) என்ற படிப்பு மூன்று வருடப் படிப்பாகும். இதில் எஸ்.எஸ்.எல்.சி.யில் படித்தவர்கள் சேரலாம்.
9. லெதர் டெக்னாலஜி(Leather Technology)
இப்போதெல்லாம் தோல் சம்பந்தப்பட்ட படிப்புகள் அதிகப் பிரபலம் அடைந்து வருகின்றன. "லெதர் டெக்னாலஜி" என்று அழைக்கப்படும் தோல் தொடர்புள்ள படிப்புகள் வேலை வாய்ப்புகளை உடனடியாகத் தருகின்றன.
10. கெமிக்கல் டெக்னாலஜி (Chemical Technology)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்புதான் "டிப்ளமோ இன் கெமிக்கல் டெக்னாலஜி". இந்தப் படிப்பு மூன்று வருடப் படிப்பாகும்.
11. பல்ப் அன்ட் பேப்பர் டெக்னாலஜி
காகித ஆலையில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் படிப்பு "டிப்ளமோ இன் பல்ப் அன்ட் பேப்பர் டெக்னாலஜி" ஆகும். எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் சேரலாம். இந்தப் பயிற்சி மூன்று ஆண்டுகள் நடைபெறும்.
12. மெட்டலர்ஜி (Metallurgy)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்புதான் "டிப்ளமோ இன் மெட்டலர்ஜி"(Diploma in Metallurgy) படிப்பாகும். இந்தப் படிப்பு மூன்று வருடப் படிப்பாகும்.
13. பாலிமர் டெக்னாலஜி (Polymer Technology)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்புதான் "டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி" (Diploma in Polymer Technology) ஆகும். இந்தப் படிப்பு மூன்று வருடப் படிப்பாகும்.
14. ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங் (Refrigeration and Air Conditioning)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்புதான் டிப்ளமோ இன் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங் (Diploma in Refrigeration and Air Conditioning) படிப்பாகும். இந்தப் படிப்பு மூன்று வருடப் படிப்பாகும்.
15. பிரிண்டிங் டெக்னாலஜி (Printing Technology)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்புதான் "டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி" (Diploma in Printing Technology). இந்தப் படிப்பு மூன்று வருடப் படிப்பாகும்.
16. டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Textile Technology)
நெசவுத் தொழில் சம்பந்தப்பட்ட படிப்புகளும் இப்போது பிரபலமாகி வருகின்றன. இந்தப் படிப்பினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு நூற்பாலைகளில் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன. நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், கோ ஆப்டெக்ஸ் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் சேரும் வகையில் அமைக்கப்பட்ட படிப்பு "டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி" (Diploma in Textile Technology) ஆகும். டெக்ஸ்டைல் டெக்னாலஜி பற்றி காஸ்ட்யூம் டிசைன் அன்ட் டிரஸ் மேக்கிங் (Costume Design and Dress Making), கார்மென்ட் டெக்னாலஜி (Garment Technology), டிசைன் அன்ட் டிராப்டிங் (Design and Drafting), மேன் மேட் பைபர் டெக்னாலஜி (Man Made Fibre Technology), நிட்டிங் டெக்னாலஜி (Knitting Technology), ஹேண்ட்லூம் டெக்னாலஜி (Handloom Technology)ஆகிய படிப்புகளும் உள்ளன.
17. சுகர் டெக்னாலஜி (Sugar Technology)
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியவும், சர்க்கரைத் தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவும்வகையில் இந்தப் படிப்பு அமைந்துள்ளது. இங்கு பல்வேறு விதமான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
18. செராமிக் டெக்னாலஜி (Ceramic Technology)
டிப்ளமோ கோர்ஸ் இன் செராமிக் டெக்னாலஜி என்னும் இந்தப் படிப்பு மூன்றரை வருடப் படிப்பு ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
19. போர்மேன் டெக்னாலஜி (Foreman Technology)
தொழிற்சாலைகளில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர்களுக்கு உதவும் வகையில் குறுகிய கால தொழில் படிப்புகள் பல உள்ளன. "வேலையில் சேர்ந்து விட்டோம். அதற்குப்பின்பும் ஏன் படிக்க வேண்டும்?" என சிலர் எண்ணுகிறார்கள். பணியில் சிறப்பிடம் பெறவும், பதவி உயர்வு பெறவும் இந்தப் படிப்புகள் மிகவும் உதவும். மேலும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் குறுகிய கால படிப்புகள் துணை நிற்கும்.
20. பிஷரீஸ் டெக்னாலஜி (Fisheries Technology)
மீன்பிடித் தொழில்நுட்பம், மீன்பிடி கப்பல்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பல்வேறு குறுகிய கால தொழில் படிப்புகள் உள்ளன. மத்திய, மாநில அரசு சார்ந்த பல மீன்வள நிறுவனங்களில் தொழில்நுட்ப அலுவலராகப் பணிபுரிபவர்களுக்கு இந்தப் படிப்புகள் மிகவும் துணையாய் அமையும்.
21. புட்வேர் டெக்னாலஜி (Footwear Technology)
பிளஸ் 2 படித்து முடித்தவர்களை இப்படிப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். 18 முதல் 25 வயது உள்ளவர்கள் மட்டுமே இதில் சேர இயலும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்களுக்கும் இப்படிப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ - மாணவிகள் www.tnpoly.in என்னும் இணையதளம் மூலமாக அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.