< Back
கல்வி/வேலைவாய்ப்பு
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2024 9:23 AM IST

தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.

சென்னை,

2011-12-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 710 ஊராட்சி, ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 ஆசிரியர் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த 4,970 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வருகிற 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையிலான 5 ஆண்டுகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதேபோல், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின்கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. அந்த 1,282 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு (2029 ஜூன் மாதம் வரை) தொடர் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்