எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா? துணை மருத்துவ படிப்புகள் இருக்கே...எங்கு படிக்கலாம்?
|எம்.பி.பி.எஸ், பிடி.எஸ். போன்ற பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால், துணை மருத்துவப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம்.
சென்னை,
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி., பி.பார்ம்., பி.ஓ.டி., பி.பி.டி., போன்ற துணை மருத்துவப் படிப்புகள் பல உள்ளன. துமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர்; எம்.ஜி.ஆர்; பல்கலைக்கழகத்தால் அங்கீகாரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளிலும் இந்தப் படிப்புகள் நடத்தப்படுகின்றது. எம்.பி.பி.எஸ், பிடி.எஸ். போன்ற பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால், இந்த துணை மருத்துவப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம்.
சில துணை மருத்துவப் பட்டப்படிப்புகள் பற்றிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. B.Sc. (NURSING)
2. B.PHARM
3. B.P.T.
4. B.ASLP
5. B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
6. B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
7. B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
8. B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
9. B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
10. B.Sc. CARDIAC TECHNOLOGY
11. B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
12. B.Sc. DIALYSIS TECHNOLOGY
13. B.Sc. PHYSICIAN ASSISTANT
14. B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
15. B.Sc. RESPIRATORY THERAPY
16. B.OPTOM
17. B.O.T
18. B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY
19. B.Sc. CLINICAL NUTRITION
B.Pharm, BASLP மற்றும் B.Optom ஆகிய படிப்புகளில் சேர…
பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலப் பாடத்துடன்-
(1) இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
(2) இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
(3) இயற்பியல், வேதியியல், கணிதவியல்
- போன்ற ஏதேனும் ஒரு பாட வரிசையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
B.Parm, BASLP மற்றும் B.Ortom ஆகிய படிப்புகள் தவிர மேலே குறிப்பிட்டுள்ள மற்ற படிப்புகளில் சேர…
பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலப் பாடத்துடன்-
(1) இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
(2) இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்
- போன்ற ஏதேனும் ஒரு பாட வாரிசையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
துணை மருத்துவப்படிப்புகளில் பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அந்த பட்ட மேற்படிப்புகள் பற்றிய விவரம் வருமாறு:
POST GRADUATE DEGREE COURSES (M.Sc. / M.Phil)
1.M.Phil. Clinical Psychology
2.M.Sc., Clinical Nutrition
3.M.Sc., Medical Laboratory Technical
4.M.Sc., Epidemiology
5.M.Sc., Molecular Virology
6.M.Sc., Biostatistics
7.M.OPTOM
8.Master of Hospital Administration (M.H.A.)
9.M.Sc., Radiography and Imaging Technology (as per 57th SAB)
10.M.Sc., Critical Case Technology
11.M.Sc., Medical Physics
12.Master of Audio and Speech Language Pathology (Upto 3 yrs)
13.M.Sc., Radio Thermo Technology
14.M.Sc., Bioethics
15.M.Sc., Public Health
16.M.Sc., Nuclear Medicine Technology
17.M.Sc., Respirator Therapy
18.M.Sc., Human Genetics
19.M.Sc., Blood Bank Technology
துணை மருத்துவப்படிப்புகளில் பட்டமேற்படிப்பு டிப்ளமோ படிப்புகள் விவரம் வருமாறு:
POST GRADUATE DIPLOMA COURSES
1.P.G. Diploma in Diabetic Education
2.P.G. Diploma in Health Promotion and Education
3.P.G. Diploma in Auditory Verbal Therapy
4.P.G. Diploma in Public Health Journalism
5.P.G. Diploma in Public Health Entomology
நர்சிங் பட்டப்படிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பை வழங்கும் படிப்பாக பி.எஸ்.சி. நர்சிங் (B.Sc. Nursing) படிப்பு ஆகும். இது நான்கு வருடப் படிப்பாகும். பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் படித்த மாணவ, மாணவிகள் பிஎஸ்சி. நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இந்தப் படிப்பை படிக்கும்போதே மருத்துவமனைகளுக்குச்சென்று நோயாளிகளைக் கவனிக்கவும், சிறிய பரிசோதனைகள் செய்யவும், நாடித்துடிப்பை கணக்கிடவும், இரத்த அழுத்தங்களை துல்லியமாகக் கண்டுபிடிக்கவும் போதிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பிரபலமாக பேசப்படும் படிப்புகளில் நர்சிங் படிப்பு முன்னிலையில் உள்ள படிப்பு ஆகும். இந்தப்படிப்பு மருத்துவ பட்டப்படிப்பாகும். மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு நர்சிங் படிப்பை முடித்தவர்களுக்கு அதிகம் உள்ளது. நல்ல சம்பளம், நிறைவான பணி என வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்தப்படிப்பில் பலரும் விரும்பிச் சேருகிறார்கள்.
இப்போது எல்லா ஊர்களிலும் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அதிகமாகி வருகின்றன. மருத்துவர்களோடு இணைந்து நோயாளிகளுக்கு கனிவாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்கின்ற வாய்ப்பை இந்த நர்சிங் படிப்பு வழங்குகிறது. 4 வருட நர்சிங் படிப்பை முடித்தவர்கள் தங்களுடைய பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.
பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்தவர்கள் எம்.எஸ்சி., நர்சிங் மற்றும் ஏராளமான டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்து தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். தற்போது இந்தியாவில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நர்சிங் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள் என ஒருபுள்ளி விவரம் தெரிவிக்கிறது.
பி.எஸ்.சி. நர்சிங் படித்தவர்களுக்கு ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தர தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் போன்றவற்றில் இப்போது இந்தியாவில் பி.எஸ்.சி. நர்சிங் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை நடத்தும் அரசு கல்வி நிறுவனங்கள் விவரம்.
(1) COLLEGE OF NURSING, MADRAS MEDICAL COLLEGE, CHENNAI - 600 003.
(2) COLLEGE OF NURSING, MADURAI MEDICAL COLLEGE, MADURAI - 625 020.
(3) COLLEGE OF NURSING, CHENGALPATTU MEDICAL COLLEGE, CHENGALPATTU.
(4) COLLEGE OF NURSING, GOVERNMENT MOHAN KUMARAMANGALAM MEDICAL COLLEGE and HOSPITAL, SALEM - 636 030.
(5) COLLEGE OF NURSING, GOVERNMENT THENI MEDICAL COLLEGE, PERIYAKULAM, THENI DISTRICT.