காலத்திற்கு ஏற்ப புதிய துறைகள்.. பலரும் விரும்பும் டேட்டா சயின்ஸ் படிப்புகள்
|கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஏராளமான புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. நாள்தோறும் நடக்கின்ற நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைய வைக்கின்றன.
பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல், வணிகம், நாகரீகம், தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதைப்போலத்தான், கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏராளமான மாற்றங்கள் உருவாகி, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. சிலருக்கு பணி இழப்பையும் தந்து விடுகின்றன.
"10 ஆண்டுகளாக பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்தேன். திடீரென ஒரு நாள் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள்"-என கவலை தோய்ந்த முகத்தோடு கண்ணீர் வடிக்கின்ற சிலரையும் பார்க்கிறோம்.
"இந்த கம்ப்யூட்டர் நிறுவனம்தான் என் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மிகச் சிறந்த பதவி வழங்கி கை நிறைய சம்பளம் தருகிறது. என் குடும்பமே இதனால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது" என ஆனந்தத்தை அள்ளி தெளிப்பவர்களும் உண்டு.
முன்பெல்லாம், கம்ப்யூட்டர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, "கம்ப்யூட்டரால் வேலை இழப்பு ஏற்படும்"- என எதிர்ப்புக்குரல் கொடுத்தவர்கள் ஏராளம்.
அதன் பின்னர்," கம்ப்யூட்டர் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை" என வாழ்த்துப்பாடியவர்களும் அதிகமானார்கள்.
இப்போது, கம்ப்யூட்டர் துறையை பற்றிய பலரின் சிந்தனைகள் நேர்மறைவையாகவே அமைகின்றன.
"கம்ப்யூட்டர் படிப்பை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் " என்ற நம்பிக்கையில் அதிக மாணவ- மாணவிகள் கம்ப்யூட்டர் படிப்பில் விரும்பிச் சேர்ந்து படிக்கிறார்கள்.
"கம்ப்யூட்டர் துறையிலும் ,சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே என்றும் சிறப்பான மதிப்பு உண்டு" என்பதை இளைய உள்ளங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால், அது சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களில் அந்த படிப்புகள் அழைக்கப்படுகின்றன.
புதிய துறைகள்
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஏராளமான புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில..
1. டேட்டா சயின்ஸ் (DATA SCIENCE)
2. பிக் டேட்டா (BIG DATA)
3. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மிசின் லேர்னிங் (ARTIFICIAL INTELLIGENCE AND MACHINE LEARNING)
4. கிளவுட் கம்ப்யூட்டிங் (கிளவுட் COMPUTING)
5. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் (PROJECT MANAGEMENT)
6. பிஸ்னஸ் இன்டெலிஜென்ஸ் (BUSINESS INTELLIGENCE)
7. சாப்ட்வேர் டெவலப்மெண்ட் (SOFTWARE DEVELOPMENT)
8. தேவ் ஓப்ஸ் (DevOps)
9. சைபர் செக்யூரிட்டி (CYBER SECURITY)
10. டிஜிட்டல் மார்க்கெட்டிங் (DIGITAL MARKETING)
11. சி ஐ எஸ் எஸ் பி (CISSP)
12. ஐ டி ஐ எல்(ITIL)
... போன்ற பல கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் பல்வேறு படிப்புகளும் பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
டேட்டா சயின்ஸ் (DATA SCIENCE)
நாள்தோறும் எல்லா துறைகளிலும் பல்வேறு விதமான "தரவுகள் "எனப்படும் "டேட்டா"கையாளப்பட்டு வருகின்றன.
புள்ளியியல் (STATISTICS), அறிவியல் சார்ந்து கம்ப்யூட்டர் மயமாக்குதல் (SCIENTIFIC COMPUTING),முறைகள் (METHODS) செயல்முறைகள் (PROCESS) அறிவியல் காட்சிப்படுத்துதல் ( SCIENTIFIC VISUALISATION), வழிமுறைகள் மற்றும் அமைப்புகள் (ALGORITHIMS AND SYSTEMS) போன்றவற்றை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட தரவுகளில் இருந்தும் (STRUCTURED DATA) கட்டமைக்கப்படாத தரவுகளில் ( STRUCUTRED DATA) இருந்தும் அறிவையும், நுண்ணறிவுகளையும் பிரித்தெடுக்க அல்லது விரிவுபடுத்த பயன்படும் ஒரு படிப்பை "தரவு அறிவியல்"அல்லது டேட்டா சயின்ஸ் (DATA SCIENCE) என அழைக்கிறார்கள்.
"டேட்டா சயின்ஸ்" பற்றிய படிப்பை முடித்தவர்களுக்கு உலக அளவில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இதனால் பலரும் இப்போது டேட்டா சயின்ஸ் பற்றிய படிப்புகளை விரும்புகிறார்கள்
டேட்டா சயின்ஸ் படிப்புகள்
டேட்டா சயின்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகள் சில ..
1. டேட்டா சயின்டிஸ்ட் மாஸ்டர்ஸ் புரோகிராம் (DATA SCIENTIST MASTER'S PROGRAM)
2. பிசினஸ் அனலிட்டிக்ஸ் எக்ஸ்பர்ட் (BUSINESS ANALYTICS EXPERT)
3. டேட்டா சயின்ஸ் வித் ஆர் புரோகிராமிங் (DATA SCIENCE WITH R PROGRAMMING)
4. டேட்டா அனலிஸ்ட் மாஸ்டர்ஸ் புரோகிராம் (DATA ANALYST MASTER'S PROGRAM)
டேட்டா சயின்ஸ் படிப்பை முடித்தவர்களுக்கு, சிறந்த முடிவெடுக்கும் திறன் தானாக அமைந்து விடுகிறது. ஏனென்றால் எந்த முடிவை எடுத்தாலும் டேட்டாக்களின் அடிப்படையிலேயே இவர்களது முடிவு அமையும் என்பதால் பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்த படிப்பை முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ளது.
டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகள்.
1. கூகுள் டேட்டா அனலிட்டிக்ஸ் (GOOGLE DATA ANALYTICS)
2. பவுண்டேசன்ஸ்: டேட்டா, டேட்டா எவ்ரிவேர் (FOUNDATIONS: DATA, DATA EVERYWHERE)
3. ஐ.பி.எம். டேட்டா சயின்ஸ் (IBM DATA SCIENCE)
4. ஐ.பி.எம். டேட்டா அனலிஸ்ட் (IBM DATA ANALYST)
5. டேட்டா சயின்ஸ் அறிமுகம் (INTRODUCTION TO DATA SCIENCE)
6. ஐ.பி.எம். டேட்டா என்ஜினீயரிங் (IBM DATA ENGINEERING)
7. டேட்டா சயின்ஸ் அடிப்படைகள்-பைதான் மற்றும் எஸ்.க்யூ.எல். ஸ்பெஷலைசேஷன் (DATA SCIENCE FUNDAMENTALS WITH PYTHON AND SQL SPECIALISATION)
8. டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் பூட்கேம்ப் பைதான் (PYTHON FOR DATA SCIENCE AND MACHINE LEARNING BOOTCAMP)
9. டேட்டா சயின்ஸ் கோர்ஸ்: முழுமையான டேட்டா சயின்ஸ் சயின்ஸ் பூட்கேம்ப் 2024 (THE DATA SCIENCE COURSE : COMPLETE DATASCIENCE SCIENCE BOOTCAMP 2024
10. டேட்டா சயின்ஸ் ஏ டூ இசட் : ஹேண்ட்ஸ்-ஆன் பயிற்சிகள் & சாட்சிபிடி பிரைஸ் (2024) - DATA SCIENCE A-Z : HANDS-ON EXERCISES & CHATCPT PRIZE (2024)
டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர தகுதிகள்.
டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகளில் புதிதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களும், கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களும் சேர்ந்து படிக்கலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே இந்த படிப்பில் சேர முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பகுதி நேரமாக டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்பில் சேர விரும்புபவர்களும் கண்டிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
வேலைவாய்ப்பு
இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தகவல் ஒளிபரப்பு நிறுவனங்கள், உடல் நலம் சார்ந்த நிறுவனங்கள், டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள், மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களில் வேலை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
வேலை வழங்கும் முக்கிய நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட், அமேசான், அக்சென்ச்சர், ஐபிஎம் அடோப், டெலாய்ட் போன்ற பிரபல நிறுவனங்கள் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன.
சில முக்கிய பதவிகள்
டேட்டா சயின்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகளை சிறப்பாக படித்து முடித்தவர்களுக்கு DATA SCIENTIST, DATA ANALYST, CHIEF DATA OFFICER போன்ற பல முக்கிய பதவிகள் பெரிய நிறுவனங்களில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.