< Back
கல்வி/வேலைவாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு
'கிளாட்' சட்ட நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
|19 July 2024 1:13 PM IST
'கிளாட்' சட்ட நுழைவுத்தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை,
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கு 'கிளாட்' எனும் பொது சட்ட நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் 'கிளாட்' தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
இதனிடையே, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத்தேர்வு டிசம்பர் 1-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கிளாட் சட்ட நுழைவுத்தேர்வுக்கு இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க அக்டோபர் 15-ந்தேதிக்குள் /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.