தூத்துக்குடியில் அக்னி வீரர்கள் தேர்வு: 1-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது
|அக்னி வீரர்கள் பணிக்கு விண்ணப்பித்த 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (பாதுகாப்பு பிரிவு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர்கள் தேர்வு தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் வருகிற 1-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.
ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி கடிதம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தேர்வு நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடக்கிறது. யாரேனும் வேலை வாங்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.