< Back
ஆசிரியரின் தேர்வுகள்
ஆசிரியரின் தேர்வுகள்
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; கேன் வில்லியம்சன் விலகல்
|22 Oct 2024 9:53 AM IST
2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
முன்னதாக முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் , காயம் முழுமையாக குணமடையாததால் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.