< Back
துபாய்
துபாய்
அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை
|21 Oct 2023 2:04 AM IST
அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
அபுதாபி,
அபுதாபி தேசிய வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருந்து வந்தது. தற்போது வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் அபுதாபி, புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமானது முதல் முதல் பலத்த மழை வரை பெய்தது.
இந்த மழை காரணமாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை வழக்கத்தைவிட மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
அபுதாபி போலீசாரும் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில், அபுதாபியின் சில பகுதிகளில் மழை பெய்வதால் வாகன ஓட்டிகள் வழக்கமான வேகத்தைவிட குறைவாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.