< Back
ஆன்மிகம்
இன்று நாக சதுர்த்தி... வாழ்வில் வளம் பெற விநாயகரை வழிபடுங்கள்
ஆன்மிகம்

இன்று நாக சதுர்த்தி... வாழ்வில் வளம் பெற விநாயகரை வழிபடுங்கள்

தினத்தந்தி
|
5 Nov 2024 6:00 AM IST

சங்கடம் அனைத்தையும் நீக்கி சவுபாக்கியம் தரவல்லது சதுர்த்தி விரதம்.

ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று நாக சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவை என்பதால், நாக சதுர்த்தி நாளில் நாக தேவதைகளை வழிபடுவது நல்லது. நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவதால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. புற்றுக்கு பால் ஊற்றியும் வழிபடுவது வழக்கம்.

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாளாக இருந்தாலும், சதுர்த்தி நாளாக இருப்பதால் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள். சங்கடம் அனைத்தையும் நீக்கி சவுபாக்கியம் தரவல்லது சதுர்த்தி விரதம்.

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகி சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை வழிபட்டால், சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்