< Back
ஆன்மிகம்
யுகாதி பண்டிகை; திருவண்ணாமலை கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
ஆன்மிகம்

யுகாதி பண்டிகை; திருவண்ணாமலை கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
30 March 2025 2:54 PM IST

திருவண்ணாமலை கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால், அதிகாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனிடையே தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று வருகை தந்துள்ளனர்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் நிலையில், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்