திருச்செந்தூர் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்
|பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் விநாயகர் எழுந்தருளி தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறார். இதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், அடுத்ததாக வள்ளி அம்பாள் தனியாக எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது.
தேரோட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஆடி அசைந்து வந்த தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.