ஆன்மிகம்
சுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்
ஆன்மிகம்

சுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்

தினத்தந்தி
|
5 Jan 2025 11:35 AM IST

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு இறைவனே வழித்துணையாக சென்றிருக்கிறார்.

சுந்தரர் தனது திருத்தல யாத்திரையின் ஒரு பகுதியாக விருத்தாசலம் நோக்கி பயணித்தார். ஒரத்தூரை கடந்தபோது அவருக்கு வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், "அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்?" என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது, அவர் மறைந்து விட்டார்.

அவர் குழப்பமாக நின்றவேளையில், சிவன் தானே வந்து வழி காட்டியதை உணர்த்தினார். மகிழ்ந்த சுந்தரர் பதிகம் பாடினார். சுந்தரருக்கு வழிகாட்டிய சிவன், சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். 'மார்க்கம்' என்றால் 'வழி'. எனவே, இத்தல இறைவனுக்கு 'மார்க்கசகாயேஸ்வரர்' என்று பெயர். 'வழித்துணைநாதர்' என்றும் இவருக்குப் பெயருண்டு.

மேலும் செய்திகள்