< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சதுரகிரியில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு
|16 Oct 2024 3:46 AM IST
சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்மழையால் காட்டாறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.