ஆன்மிகம்
நெல்லை-தென்காசியில் பஞ்ச குரோச தலங்கள்

கடையம் வில்வவனநாதர் கோவில்.

ஆன்மிகம்

நெல்லை-தென்காசியில் பஞ்ச குரோச தலங்கள்

தினத்தந்தி
|
18 Dec 2024 9:58 PM IST

ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்.

சிவபெருமானின் தலங்களில் காசிக்கு சமமானதாக வகைப்படுத்தப்பட்ட தலங்கள் பஞ்ச குரோச தலங்கள் என அழைக்கப்படுகின்றன. குரோச என்பதற்குக் காசிக்கு நிகரான என்று பொருள். காசிக்கு சென்று வர வசதி இல்லாத மக்களுக்காக உருவானவை பஞ்ச குரோச தலங்கள் என கூறப்படுகிறது.

தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன். அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்து தலங்களை உண்டாக்கியதால் அவை "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" எனப்படுகின்றன. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். காசியிலும், கும்பகோணத்திலும் பஞ்ச குரோச தலங்கள் உள்ளன.

அவ்வகையில திருநெல்வேலி- தென்காசி மாவட்டங்களில் 25 கி.மீ தொலைவிலேயே காசிக்கு நிகரான இந்த பஞ்சகுரோச ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

பஞ்ச குரோச ஸ்தலங்கள்:

1. சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில்.

2. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ வன்னியப்பர் திருக்கோவில்.

3. கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ வில்வவனநாதர் திருக்கோவில்.

4. திருப்புடைமருதூர் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ நாறும்பூநாதர் திருக்கோவில்.

5. பாபநாசம் ஸ்ரீ உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாசநாதர் திருக்கோவில்.

மேலும் செய்திகள்