ஆன்மிகம்
ஆன்மிகம்
சொர்க்கவாசல் திறப்பு - வைணவ தலங்களில் குவிந்த பக்தர்கள்
|10 Jan 2025 4:22 AM IST
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.