< Back
ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

தினத்தந்தி
|
6 Jan 2025 3:32 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று (திங்கட்கிழமை) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி திருமுக்குளம் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவ மண்டபம் தயார் நிலையில் உள்ளது. தினமும் ஆண்டாளுக்கு மார்கழி எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்