< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை

தினத்தந்தி
|
18 Oct 2024 1:06 PM IST

மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவ்வகையில், புரட்டாசி பவுர்ணமியையொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது.

உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

கருட வாகன சேவை நிகழ்வில் திருமலையின் இரு பீடாதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்