< Back
ஆன்மிகம்
மாசிமக பிரம்மோற்சவம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஆன்மிகம்

மாசிமக பிரம்மோற்சவம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
11 March 2025 2:15 PM IST

பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டின் மாசிமக திருவிழா, கடந்த மாதம் 11-ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 21-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. விபசித்து முனிவருக்கு காட்சிளிக்கும் ஐதீக நிகழ்ச்சியானது 8-ம் தேதி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்தனர்.

நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (மார்ச் 13) தெப்போற்சவம் நடைபெறுகிறது. 14-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், 15-ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பம், 24-ம் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவுடன் மாசி மக திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்