ஆன்மிகம்
ஆன்மிகம்

மகா கும்பமேளா: பிரயாக்ராஜ் நகரில் குவியும் சாதுக்கள்.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
2 Jan 2025 5:02 PM IST

கும்பமேளாவில் கலந்து கொள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வரும் 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். திரிவேணி சங்கமம் நோக்கி ஊர்வலமாக செல்லும் சாதுக்களை பொதுமக்கள் உற்சாகமாக மலர்கள் தூவி வரவேற்றனர்.

கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நதிகள் மற்றும் பல்வேறு நீா்நிலைகள் தூய்மை செய்யப்படுகின்றன. கூடுதலாக படித்துறைகளும், நீராடும் துறைகளும் கட்டப்படுகின்றன.

மேலும் செய்திகள்