< Back
ஆன்மிகம்
இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம்
ஆன்மிகம்

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம்

தினத்தந்தி
|
21 Nov 2024 11:55 AM IST

கந்தபுராணம் தோன்றிய தலம், கந்தபுராணம் அரங்கேறிய தலம் என்ற சிறப்பை குமரகோட்டம் முருகன் கோவில் பெற்றுள்ளது.

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில். காஞ்சியிலுள்ள முருகன் கோவில்களில் இது தனித்துவம் கொண்டதாகும்.

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் நடுவில் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமாஸ்கந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

இங்கு தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.

கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். அதாவது, முருகப்பெருமான், கச்சியப்ப சிவாச்சாரியாரிடம், "திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம். கச்சியப்பருக்கு பெருமை சேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கி.பி. 11-ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

மேலும் செய்திகள்