< Back
ஆன்மிகம்
வடபழனியில் அறநிலையத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம்; 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
ஆன்மிகம்

வடபழனியில் அறநிலையத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம்; 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

தினத்தந்தி
|
7 Nov 2024 9:52 AM IST

வடபழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கந்தசஷ்டி கவச பாராயணத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது. இதன்படி முருகன் கோவில்களில் கடந்த 2-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்த திருத்தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் வடபழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக வடபழனி ஆண்டவர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.

இதில் சென்னை கபாலீஸ்வரர் கோவில் கல்லூரி மாணவிகள் 50 பேர், ஏகாம்பரேஸ்வரர் கோவில் பள்ளி மாணவிகள் 69 பேர் என மொத்தம் 119 கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்று, கந்தசஷ்டி கவச பாடல்களை ஒரு சேர பாடி அசத்தினர்.

மேலும் செய்திகள்