< Back
ஆன்மிகம்
சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்
ஆன்மிகம்

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்

தினத்தந்தி
|
3 Nov 2024 10:07 PM IST

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்