< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்; பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
|4 Jan 2025 9:55 PM IST
சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக 41 நாட்கள் நடை திறக்கப்பட்டது. இதைத், தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
இதனிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனுபவம் இல்லாத போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.