ஆன்மிகம்
ஆன்மிகம்
கருடனுக்கு இல்லாத பெருமை பெற்ற அனுமன்
|27 Dec 2024 5:41 PM IST
ராமாவதாரத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவைபுரிந்தவர் அனுமன்.
மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன் - அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது ராமாயணத்தில் ராமருக்கும் அனுமனுக்கும் உள்ள பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவைபுரிந்தவர் அனுமன்.
இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால்தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு.
அதாவது, பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனிச் சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள் பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.