< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டி; திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
|5 Jan 2025 5:16 PM IST
புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டியையொட்டி, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில் புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டியையொட்டி, இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகம், வள்ளி குகை, பேருந்து நிலையம், கடற்ரை பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.