< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு
|2 Nov 2024 9:12 PM IST
இலவச தரிசனத்தில் ஏழுமலையான தரிசிக்க வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இலவச தரிசனத்தில் ஏழுமலையான தரிசிக்க வந்த பக்தர்கள் காத்திருப்பு மண்டபங்களில் சுமார் 24 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே போல், 300 ரூபாய் டிக்கெட்டில் முன்பதிவு செய்த பக்தர்கள், 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், காபி உள்ளிட்டவை தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.